இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதிலும், இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது.
ஆனால், என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பலரும் பயன்படுத்தினாலும் ஐபோன் பயன்பாட்டாளர்களின் மதிப்பு குறையவே இல்லை.
அந்த வகையில், ஸ்மார்ட்போன்களில் செயலியை மறைத்து வைப்பதற்கு பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் ஐபோன்களில் குறிப்பிட்ட செயலிகளை மறைத்து வைப்பதற்கு என சில வழிமுறைகள் உள்ளது.
முதலில், ஆப் ஸ்டோர் செயலியை ஓபன் செய்யவும் அதன்பின் அக்கவுண்டை ஓபன் செய்யவும்.
அடுத்து, அக்கவுண்டை ஓபன் செய்வதற்கு மேலே உள்ள தங்களது புகைப்படத்துடன் இருத்தும் தேர்வை கிளிக் செய்யவும்.
வாங்கு என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதன்பின், விரும்பும் பயன்பாட்டை கண்டுபிடித்த பின் மேலே ஓபன் மற்றும் ஹைட் காண்பிக்கப்படும் அதை இடதுபுறமாக ஸ்வைப் செய்து ஹைட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.
முடிந்தது என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். ஆப் ஸ்டோர் பயன்பாட்டை திறக்கவும் தங்களது கணக்கை திறக்கவும் அதற்கு தங்களது புகைப்படத்தை தட்டவும்.
கீழே ஸ்க்ரால் செய்து மறைக்கப்பட்ட பயன்பாடுகளை வாங்குதல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
இதில் தங்கள் மறைக்கப்பட்ட பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து அதை அன்ஹைட் செய்து கொள்ளலாம்.