தமிழகத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொன்ற நல்ல பாம்பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உயிரை விட்டுள்ளது.
பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தனது வீட்டில் உரமூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்.
அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த நல்ல பாம்பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி கடித்தது. பாம்பு கடித்ததில் அலறிய செல்வராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது விட்டது. பின்பு பாம்பு கடித்த செல்வராணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைபலனின்றி செல்வராணி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த பாலக்கோடு காவல்துறையினர் பெருமாள் வீட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு காவலர்கள் விசாரணை செய்து கொண்டிருந்த போது செல்வராணியை கடித்த அதே பாம்பு 8 நாட்கள் கழித்து மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது.
பாம்பை பார்த்த அவர்கள் பரபரப்பாயினர். உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். இதன் காரணமாக செல்வராணியை கொன்ற அதே இடத்தில் தனது உயிரையும் நல்ல பாம்பு விட்டுள்ளது.