பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. கடந்த வாரம் வந்த TRP ரேட்டிங்கில் கூட இந்த சீரியல் டாப்பில் உள்ளது.
இந்த வெற்றியை விட்டுவிட வேண்டாம், இன்னும் அதிக பார்வையாளர்களை சீரியல் கவர வேண்டும் என சில ரசிகர்கள் கர்ணன் படத்தில் இடம்பெற்ற உட்றாதீங்க எம்மோவ் என்ற பாடலை வைத்து எல்லாம் வீடியோ உருவாக்கியுள்ளனர்.
அதை பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் சிலர் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா என்கிற பரீனா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் பாரதியை DNA டெஸ்ட் எடுக்க விடுவீர்களா என கேட்க, அதற்கு பரீனா Wait And Watch என பதிவு செய்துள்ளார்.
அவரது பதிலை பார்க்கும் போது சீரியலில் அடுத்து அதிரடியாக ஏதோ நடக்கப்போவது உறுதியாகியுள்ளது.