சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்கு முன்பில் இருந்து ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அவர்கள் ஒளிபரப்பிய நிறைய சீரியல்கள் இன்னமும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளது. கடந்த சில மாதங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் முன்னிலையில் இருந்தது.
டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் டாப். தற்போது இந்த வாரம் ரோஜா சீரியலின் டிஆர்பி கொஞ்சம் கீழே இறங்கியுள்ளது. முதல் இடத்தில் சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த செய்தி அந்த சீரியல் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.