சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது பிஷாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்கி வருகிறது.
200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் அதிக மெகாபிக்சல் கேமராவை வழங்குவதோடு, பெரிய பிக்சல் அளவை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம்.