குமுடிபூண்டியிலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் வசித்துவருகின்ற தமிழ் மாணவன் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு சாதனை படைத்தவர் பதினாறு வயதான ரஞ்சன் திவேஸ் என்ற மாணவனாவார்.
உக்கிரனைச் சேர்ந்த இளம்பெண் குருடாஸ் ருசியான என்பவர் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
இதனை முறியடித்துக் குறித்த சிறுவன் ஒரு நிமிடத்தில் பின்புறமாக ம் பலூன்களை உடைத்து சாதனைப்படைத்துள்ளார்.
ஐந்து வருட யோகா பயிற்சியின் விளைவாக இவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.