நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட வடமராட்சி வடக்கு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.