கொழும்பு துறைமுக நகரத்தில் தொழிலுக்காக பல்வேறு பயிற்சி வழங்கி இளைஞர், யுவதிகளை தொழிலில் ஈடுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க திறன் மேம்பாட்டு தொழில் கல்வி இராஜாங்க அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்கான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சீத்தா அரபேபொல மற்றும் துறைமுக நகரத்திற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
துறைமுக நகரத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அவசியமான பயிற்சிகள் உரிய முறையில் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சின் நிறுவனங்கள் ஊடாக இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.