நாட்டில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டை மீண்டும் திறப்பது பொருளாதாரத்தின் முக்கிய படியாகும்.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் தற்போதைய தொற்று நோயின் நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகுமொன சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே எச்சரித்துள்ளார்.