பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்ற அனிதா சம்பத், அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எந்த குரூப்பிலும் சாயாமல், நடுநிலையாக தனது விளையாட்டினை விளையாடி வந்தார்.
தற்போது ஒரு சில சர்ச்சையில் சிக்கி வருகின்றார். பிரபல இயக்குனரையும், ஆரியின் வெற்றியும் குறித்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார். அதே போல தனது கணவர் பெயரை கூறிய ஆரியிடம், ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார்.
அந்த அளவிற்கு தனது கணவர் மீது மிகுந்து அன்பு கொண்டவர் அனிதா, தற்போது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது.
சமீபத்தில் முகநூல் பக்கம் ஒன்றில் அனிதா தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா? உண்மை இது தான் என்ற தலைப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அனிதா, கண்டன்ட் இல்லனு இந்த அளவிற்கு இறங்கிட்டாங்க கிசுகிசு பக்கங்கள். தினமும் யூடுயூப்ல வீடியோ போட்றத எல்லாம் அட்மின் பாக்கறதில்ல போல என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.




















