விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை கொண்டாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனும் சூப்பராக ஓடியது. தற்போது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் குக் வித் கோமாளி 3 தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவராக இருந்தவர்களில் ஒருவர் தாமு. இவர் போட்டியாளர்கள், கோமாளிகளுடன் அடித்த லூட்டியை நம்மால் மறந்திருக்க முடியாது.
தற்போது செப் தாமு ஒரு சீரியலில் வந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் சீமந்த விழாவில் Chef தாமு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.