தொலைக்காட்சிகளில் சீரியல்கள், நிகழ்ச்சிகளை தாண்டி மக்கள் அதிகம் பார்ப்பது செய்தி. நாட்டில் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது நடக்கிறது.
அப்படி மக்களுக்கு கொடுக்கும் செய்தியை படிக்க அழகாக பாசிப்பாளர்களாக தொலைக்காட்சிகள் தேர்வு செய்கிறார்கள். அப்படி சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களை மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் அனிதா சம்பத்.
அந்த துறையை விட்டு அவர் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தார்.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார்.
இந்த நிலையில் தான் அனிதா சம்பத் அவரது கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வந்தது. ஆனால் உண்மையில் இது முழுக்க முழுக்க வதந்தி என்று அனிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.