மீசாலைப் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இன்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.