மூத்த அரசியல்வாதிகள் அரசியலில் மற்றுமொரு சந்ததியினரை உருவாக்க முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன்,வெறுமனே நாடாளுமன்றத்தினை வருட காலமாக அலங்கரித்தவர்களாகவே காணப்படுகின்றனர் என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் தலைவரும், பேராசிரியருமான கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு பாரிய சவாலாகும் கௌதாரிமுனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் கௌதாரிமுனை பகுதி இந்தியாவிற்கு பாரிய சவாலாக அமையும்.இந்தியா தனது இருப்பிடத்திற்கு ஏற்ற வகையில் தௌிவோடு நகருமாக இருப்பின் இந்தியாவின் இருப்பிடத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதாவது அரசியலில் இன்னுமொரு சமூகம் ,சந்ததி,இளம் தலைமுறைகள் நாடாளுமன்ற அரசியலுக்குள் உள்வாங்கும் ,நகர்வுகளை புரிந்துக்கொள்ளும் காலப்பகுதியினை கூட இளம் தலைமுறைகளுக்கு விட்டு வைக்கவும் இல்லை. ஒப்படைக்க தயாராகவும் இல்லை.
இதனையெல்லாம் மீறி ஒப்படைக்க வருபவர்களையும் தங்களது கூலிகளாகவும்,அடிமைகளாகவும்,தங்களது கொள்கைகளை பின்பற்றுபவர்களை மாத்திரமே அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் தற்போதைய காலப்பகுதிகளில் பொது வெளியில் உரையாடப்பட வேண்டிய விடயங்கள்.
அரசியலில் ஒரு மாறுதல் தேவையென்ற நிலைப்பாடு மாத்திரமே இதனை ஒரு ஆரோக்கியத்தினை நோக்கி நகர்த்த முடியும்.இதற்கு புலம்பெயர் அமைப்புக்களே பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.