கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு இடத்தில் கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென கிரேன் ஒன்று நிலைகுலைந்து உடைந்து விழுந்தது. Kelowna என்ற இடத்தில்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக அவசர உதவிக்குழுவினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டதுடன், எந்த கட்டிடத்தின்மீது கிரேன் விழுந்ததோ, அந்த கட்டிடத்தில் இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலர் இந்த துயர சம்பவத்தில் பலியாகியுள்ளதாக கூறப்பட்டாலும், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பொலிசார் வெளியிடவில்லை.
உயிரிழந்தவர்கள் சப்காண்ட்ராக்டர்கள் என்று கருதப்படுகிறது. அத்துடன், கிரேன் உடைந்து விழுந்ததில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நகரத்தில் ஏழு நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.