பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் கல்யாண வைபோகம் களைகட்டியுள்ளது.
அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் மகள், மகளை வெறுத்து ஒதுக்கும் தந்தை என இவர்களுக்கு இடையேயான பாசப்போராட்டத்தை அழகான காட்சிகளுடன் விறுவிறுப்பாக கொண்டு செல்லும் சீரியல் தான் ”கண்ணான கண்ணே”.
அப்பாவுக்கு தன் காதலனையே தங்கைக்கு விட்டுக் கொடுக்க துணிந்துவிட்டாள் மீரா.
இதுபற்றிய உண்மை யமுனாவுக்கு தெரியவந்தாலும், எப்படியோ பேசி சமாளித்துவிட்டு மணமேடையில் தங்கை ப்ரீத்தியை அமரவைக்கிறார்.
மணமேடையில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அனைவரிடமும் தாலியை கொண்டு சென்று ஆசிர்வாதம் வாங்குகிறாள் மீரா.
சடங்குகள் முடிந்து, கெட்டி மேளம் அடிக்கும் நேரத்தில் மீராவின் கழுத்தில் யுவா தாலி கட்ட செல்வது போன்று இன்றைய ப்ரோமோ முடிகிறது.
மீராவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டானா யுவா? இவர்கள் காதல் ஜெயித்ததா? ப்ரீத்தியின் நிலை என்ன? மீராவின் தந்தை இதை ஏற்றுக்கொள்வாரா? என பல திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு கண்ணான கண்ணே விருந்தளிக்க காத்திருக்கிறது!!!