அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலிருந்த கஜேந்திரமோகன் என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில்வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த தமிழ் இளைஞர் தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.