நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்கேன் செய்வதன், மூலம் இன்னும் நாம் எத்தை ஆண்டுகாலம் உயிருடன் இருப்போம் என்பதை கடிகாரம் கணிக்கிறது.
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் இன்ஹ்ட பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University ஆராய்ச்சியாளர்கள், சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களின் இரத்ததை மதிப்பிட்டு கணக்கிட்டுள்ளனர்.
இதற்கு அவர் inflammatory clock அல்லது iAge என்று அழைக்கின்றனர். இந்த inflammatory clock ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு பழமையானது, இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எவ்வளவு காலம் இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும் என்பது கணிக்கிறது.
இதன் மூலம் யார் பலவீனமடையப் போகிறார்கள் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கும் Dr. David Furman கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இதன் மூலம் நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி வயது தொடர்பான ஒவ்வொரு நோய்க்கும், அதன் aetiology-யின் ஒரு பகுதி வீக்கம் உள்ளது.
இதனால் பலவீனம் மற்றும் நாள்பட்ட நோய்கள் காரணமாக, நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதை இதை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது அதே சமயம் அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? இது எப்படி செயல்படுகிறது? எந்தளவிற்கு துல்லியமானதாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.