கொழும்பு நகரில் புதிய வகை கோவிட் வைரஸ் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்து அதிகாரியான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் புதிய வகை வைரஸ் தொற்றுள்ள 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் புதிய வகையான வைரஸ் தொற்றானது தீவிரமடைவதை கட்டுப்படுத்துவதற்கான அவதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை டெல்டா தொற்றுடன் நாட்டில் இதுவரையில் 38 பேர் வரையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரகளில் 20 இற்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.