பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிவரவு மண்டபம் நேற்று பொது மக்கள் பாவனைககாக திறந்து வைக்கப்பட்டது.
அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் முதல் முனையம் முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சுமார் 430 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட புதிய குடிவரவு மண்டபத்தில் 23 கவுண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்தி செய்யப்பட்ட வடிவமைப்பு மூலம் ஒரு முறையான மற்றும் திறமையான செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.