கண்டியில் மூளை சாவடைந்த பெண்ணினால் 2 பேர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தந்தையை இழந்த இரண்டு பிள்ளையின் தாய் மூளை சாவடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவரது உடற்பாகங்களை தானம் செய்ய பிள்ளைகள் நடவடிக்கை எடுத்ததாக கண்டி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பதென்ன, காவத்தை பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மகளும் 17 வயதுடைய மகனுமே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் உடலில் விஷம் கலந்தமையினால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 45 வயதுடைய தாயின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த பெண்ணின் உடற்பாகங்கள் இருவருக்கு தானம் செய்து அவர்களின் உயிரை காப்பாற்ற பிள்ளைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய நேற்று முன்தினம் காலை இந்த உடற்பாகங்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற்பட்டு கேகாலை மற்றும் மீமுரே பிரதேசங்களை சேர்ந்த இருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.