இலங்கையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர், விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம் பிணையளித்தது.
நேற்றைய தினம் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அவரை அடையாளம் காட்டியதாக வழக்கு விசாரணையின் போது மேலதிக நீதிவான லோச்சனீ அபேவிக்ரம திறந்த மன்றில் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தறகே முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையளித்தது.