பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொடை – துட்டுகெமுன பகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதார்.
இன்று காலை திடீர் சுகயீனமடைந்த நிலையில், குறித்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.