தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுக கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். காதல் சம்பந்த படமாக ஆரம்பத்தில் நடித்த விஜய், திருமலை படத்தின் மூலம் மாஸ் நடிகராக கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
தற்போது இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படத்தில் பல கோடி செலவில் நடித்து வருகிறார் தளபதி விஜய். சமீபத்தில் அவர் நடித்து வெளியான பிகில், மாஸ்டர் படம் பல கோடிக்கணக்கில் வசூல் பெற்றது. ஒரு படத்திற்க்காக சுமார் 40 கோடி ரூபாய் வரையில் சம்பளமாக பேசி வாங்கி வருகிறார். ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திற்கு சுமார் ரூ. 80கோடி அளவில் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்போது வரையில் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 410 கோடியாம். ஆறு கோடி மதிப்புள்ள ரால்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும், 1.30 கோடி மதிப்பிலான ஆடி எ8, 75 லட்சம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ் 6, மினி கூப்பர் காரும் வைத்துள்ளாராம். சமீபத்தில் 7 கோடி மதிப்பிலான ரால்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டமுடியாது என்று வழக்கு போட்டதில் 1 லட்சம் அபராதம் கட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.