நாட்டில் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தினுள் புகையிரதங்கள் நுழைந்து வெளியேறுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
கோவிட் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலுக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.