பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது.
நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான். எனது திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.




















