ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 4 ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது.
இந்நிலையில் 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணியில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 34 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் பூரன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 20 ஓவரில் 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆரோன் பின்ச் மட்டும் 34 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரல் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று அசத்தியது.