பிக் பாஸ் புகழ் சாண்டியின் மனைவிக்கு வீட்டில் வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
சாண்டி – சில்வியா தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில் தற்போது சாண்டி மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
அவருக்கு முறைப்படி வளைகாப்பு நடத்தி சாண்டி அழகு பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.