பிரித்தானியாவில் பைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு முகம் முடங்கிப்போனதுடன் கண்கள் மூட முடியாமல் அவதிக்குள்ளானதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் குறிப்பிட்ட என்ணிக்கையிலானவர்கள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பைஸர் தடுப்பூசி தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
61 வயதான பிரித்தானியர் பைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்ட நிலையில், அவரது முகம் முடங்கியதுடன் கண்களை மூட முடியாமல் அவதிக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.
பரிசோதித்த மருத்துவர்களும் பைஸர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவு இதுவென உறுதியும் செய்துள்ளனர். மேலும், மருத்துவத்தில் இதனை Bell’s palsy என குறிப்பிடுகின்றனர்.
இந்த பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், 9 மாதங்கள் அல்லது சிலருக்கு ஓராண்டுகளுக்கும் மேலாகலாம் குணமடைய என தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான 61 வயது பிரித்தானியருக்கு முதல் டோஸ் போட்டுக்கொண்ட போதே பக்கவிளைவுகள் தென்பட்டுள்ளது. இந்த நிலையில், பைஸர், மாடர்னா அல்லது ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட சிலருக்கு Bell’s palsy பாதிப்பால் அவதிக்குள்ளானதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது, பைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்களில் நால்வருக்கு Bell’s palsy பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாடர்னா மற்றும் ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் மூவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது Bell’s palsy பாதிப்பு ஏற்பட்டுள்ள பிரித்தானியர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.