ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை செல்போன் சூடாவது.
ஸ்மார்ட் போனை அதிக நேரம் தொடர்ச்சியாக உபயோகிக்கும் பொழுது போன் சூடாகி விடுவது இயல்பு தான்.
அதுவே உபயோகிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அதிகப் படியாக சூடானால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
மொபைல் போன் சூடாவதற்கான அடிப்படை காரணங்களையும் சூடாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் போன் எதனால் சூடாகிறது?
அதிக நேரம் சார்ஜ் ஏற்றுவது
மொபைல் போன் 100% சார்ஜ் ஏறியவுடன் மின் இணைப்பைத் துண்டிக்காமல் விடுவதால் மொபைல் போன் சூடாகிறது. இரவில் போனை சார்ஜில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி மொபைல் போனை சார்ஜில் போடுவதை தவிர்க்க வேண்டும்.
மொபைல் போனை சார்ஜில் போடும் பொழுது மொபைலை தலையணை, சோபா, மெத்தை போன்ற மென்மையான இடங்களில் வைக்கக் கூடாது. மென்மையான இடங்கள் வெப்பத்தை உறிஞ்சுவதால் மொபைல் விரைவில் சூடாகி விடும்.
Connectivity
தேவை இல்லாத நேரங்களில் இருக்கும் இடத்தைக் குறிக்கக் கூடிய செயலியை disable செய்தல் அவசியம். அவை நாம் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டே இருப்பதால் மொபைல் சூடாகிறது. WI-FI, BLUE TOOTH, MOBILE DATA, facebook, twitter இவற்றையும் பயன்படுத்தாத நேரங்களில் disable செய்தல் அவசியம்.
சார்ஜர் (charger)
ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு பயன்படுத்தப் படும் li-Ion வகை பேட்டரிகள் சிறந்தவை தான் என்றாலும் அதிக நாட்கள் பேட்டரியை பயன்படுத்தாமல் இருந்து இருக்கும் பட்சத்தில் சார்ஜ் ஏற்றும் பொழுது மொபைல் சூடாகி விடும். அந்தந்த மொபைல்களுக்கு உரிய சார்ஜர்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதிக அல்லது குறைந்த வோல்டேஜ் கொண்ட சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றும் பொழுது மொபைல் விரைவில் சூடாகி விடும்.
செயலிகள் (Apps)
அதிக செயல்திறன் கொண்ட செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவை இல்லாத நேரங்களில் Backgroundல் இயங்கக் கூடிய Appsகளை Close செய்து விட வேண்டும். அதிக அளவு மொபைல் போனில் Games விளையாடுவதால் மொபைல் அதிக அளவு சூடாகி விடும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை gamesகளை Close செய்வது அவசியம்.
தீர்வுகள்
மொபைல் போனில் உள்ள software மற்றும் Appsகளை எப்பொழுதும் Update ஆக வைத்திருத்தல் அவசியம். பிளாஸ்டிக் வகை பேனல் கொண்ட மொபைல்களை நேராக சூரிய ஒளி படக் கூடிய இடங்களில் வைத்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
மொபைல்கள் அதிக சூடாக இருக்கும் பொழுது mobile case coverகளை அகற்றி விடுவதால் மொபைல் சூடு குறையும்.