கண்டியில் வயோதிப பெண் ஒருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னா தடுப்பூசியே இவ்வாறு இரண்டு தடவைகள் தவறுதலாக ஏற்றப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு சில நிமிடங்களில் மற்றுமொரு தடுப்பூசியும் தவறுதலாக ஏற்றப்பட்டுள்ளது.
கண்டி ஓகஸ்வத்த தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு தடுப்பூசிகள் அடுத்தடுத்து ஏற்றப்பட்டதனால் குறித்த பெண் மயக்கமடைந்துள்ளார் எனவும், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான அதிகாரபூர்வ விசாரணைகள் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்ற முதல் தடவையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.