பிரபல திரைப்பட நடிகையான பிரியாமணியின் திருமணம் சட்டவிரோதமானது என்று முதல் மனைவி குற்றம் சாட்டுகிறார்.
சமீபத்தில் வெளியான The Family Man தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் Mustafa Raj. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாமனியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பிரியாமணியின் திருமணம் சட்டவிரோதமானது என்று Mustafa Raj முதல் மனைவியான ஆயிஷா கூறியுள்ளார். இது குறித்து Mustafa Raj மற்றும் பிரியாமணி மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் அவர் நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, இது சட்டவிரோதமான திருமணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிஷாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் அவர் முஸ்தபா ராஜ் மீது வன்முறை புகாரும் கொடுத்துள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஆயிஷாவிடம் பிரத்யேகமாக இது குறித்து கேட்ட போது, முதலில் அவர் பேசத் தயங்கியுள்ளார்.
அதன் பின், பிரியாமணியின் திருமணம் செல்லாது, நாங்கள் விவாகரத்து கூட தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து முஸ்தபரா ராஜ் இது குறித்து பேசுகையில், எனக்கு எதிராக அவர் கூறியுள்ள அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் பொய்யானவை.
குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்தும் தவறாமல் நான் செய்து வருகிறேன். இப்போது அவர் என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்கு இந்த செயலில் இறங்கியுள்ளார்;.
கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 2013-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றதாகவும், அதன் பின்னரே 2017-ஆம் ஆண்டில் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், ஆயிஷா ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் மட்டுமே அடுத்தடுத்த உண்மை தெரியவரும்.