ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. சிப்செட், 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.3 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11.3 வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 அம்சங்கள்
– 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர்
– ARM G77 MC9 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 31) மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11.3
– டூயல் சிம் ஸ்லாட்
– 50 எம்பி பிரைமரி கேமரா, 1μm, f/1.88, OIS, டூயல் LED பிளாஷ்
– 8 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25, EIS
– 2 எம்பி மோனோ கேமரா, f/2.5
– 32 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 29,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.