பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். அடயத்தே கண்மனி, சொப்ன லோகத்தே பாலபாஸ்கர், குஞ்சிரமயனம், அமர் அக்பர் அந்தோனி உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படன்நயிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கேரள மாநிலம் கடவந்தராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. படன்நயில் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால். திலீப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.