இலங்கையில் சிறுவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து வரையிலான சிறார்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 500க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் இதில் பத்து சிறார்கள் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் புத்தாண்டு கொத்தணியினால் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து எண்பத்து நான்காயிரமாக பதிவாகியுள்ளது.
அண்மைய நாட்களில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.