எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
பெசல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, தமிழீழ இளைய தலைமுறையினர் என்ற பெயரில் அடையாள அட்டையை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், தமிழ் இளைஞர்களை இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்காக மாதாந்தம் 10 சுவிஸ் பிராங்குகளை மக்களிடம் இருந்து அறவிட குறித்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளை இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய அமைப்பு விடுதலைப் புலிகளின் புதிய தலைமுறை என ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்புத் தகவல்கள் கூறுவதாகவும் அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.