சீனக்கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று ஜெஜியாங் பகுதியை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரயில், கப்பல், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய சீனா பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இதன்போது,ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக 58 பேர் வரை மரணமடைந்துள்ளதுடன்,மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மையம் கொண்டுள்ள புயல் புயல் மற்றும் மழையின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எச்சரிக்கையின் காணமாக சிஜியாங் பகுதியில் பள்ளிகள், மார்கெட், கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சாலைப் போக்குவரத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டைபூன் புயலின் காரணமாக இந்தப் பகுதியில் இயக்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்ஷூவா விமான நிலையத்தில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக மேலும் பல விமானங்களுக்கும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதியிலுள்ள துறைமுகத்தில் சரக்கு மற்றும் பயணக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து கப்பல் வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
புயல் மையம் கொண்டுள்ளதால் துறை முகப்பகுதிகளில் உச்ச பட்ச எச்சரிக்கையான மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தமை விதிக்கப்பட்டுள்ளன.