சிறிலங்கா ஏயார்லைன்ஸ் 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளில் 70% வருமான இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் அசோக்பத்திரகே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
உலகளவிய ரீதியில் கோவிட் பரவல் காரணமாக வானூர்தி துறையில் 60 முதல் 80 வீதமான இழப்புக்கள் ஏற்பட்டன என்பதை அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை கட்டுபாடுகள் மற்றும் வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதும் சிறிலங்கா ஏயார்லைன்ஸ் தொடர்ந்தும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 229 வானூர்திகளில் 74,032 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
எனினும் 2021ஏப்ரல் முதல் இதுவரையான காலப்பகுதியில் அட்டவணைப்படுத்தப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தியில் 35,612 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அசோக் பத்திரகே குறிப்பிட்டுள்ளார்.