சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ்.
இதில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி, திருமதி ஹிட்லர், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று துவங்கவுள்ளதாம்.
இந்த புதிய சீரியலில் ஆனந்த் செல்வன் என்பவர் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவர், இதற்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.