முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களை தேடுவதற்கான இன்று முதல் விசேட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உரிய முறையில் முகக் கவசம் அணியாத நபர்களை தேடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திலேயே இந்த நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.