பீகாரில், காதலனை கொன்ற காதலி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரின் வீட்டின் முன்பே இறுதி சடங்குகளை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ரெபுரா ராம்புர்ஷா கிராமத்தில் வசிக்கும் சவுரப் குமார் என்பவர் பக்கத்து கிராமமான சோர்பாராவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் அந்த வாலிபர் கடந்த வெள்ளியன்று அந்த காதலியின் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட காதலியின் குடும்பத்தினர், குமாரை மடக்கி பிடித்து அவரின் ஆணுறுப்பை வெட்டி வீசி கொடூரமாக கொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குமாரின் உறவினர்கள், காதலியின் குடும்பத்தினரோடு தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், குமாரின் சடலத்தை அவரின் வீட்டு வாசலிலேயே எரித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.