கொழும்பின் சில பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று காலை முதல் கொழும்பின் பெரும்பாலான இடங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் பொரள்ளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.