இங்கிலாந்து பிராந்தியத்தில் தலைநகர் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்துக்கு பொழியவேண்டிய சராசரி மழைப்பொழிவு ஓரிரு மணிநேத்தில் இடி மின்னல் தாக்கத்துடன் பெய்ததால் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இரண்டு மருத்துவமனைகள் மற்றும் நிலகீழ் தொடருந்து நிலைங்களில் கடும் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் வீடுகள் உட்பட பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது: