பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் (பெரியது) – 350 கிராம்,
பாலக்கீரை – 12,
புதினா-10 இலைகள்,
கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு,
இஞ்சி – 1/2 துண்டு,
எலுமிச்சைசாறு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
குடை மிளகாய் – 1 துண்டு,
மிளகுத்தூள் – ருசிக்கேற்ப
செய்முறை
வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். சிறிதளவு வெள்ளரிக்காயை எடுத்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சி, குடைமிளாகாய், பாலக், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த ஜூஸ் உடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக துருவிய வெள்ளரிக்காயை மேலே தூவி பரிமாறவும்.
குளுகுளு வெள்ளரி, பாலக் கூலர் ரெடி.