பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் 86 கிராம ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஆறு இலட்சம் என தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி அல்அமீன் வீதியிலுள்ள குறித்த நபரின் வீட்டிலிருந்தே இன்று இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் இவர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.