ரஜினிகாந்த் – சிவா கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.