பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்காதது நிறைய நடந்து வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து காணப்படும் காட்சிகள் இப்போது அதிகமாகி வருகிறது.
அப்படி கடைசியாக ஹேமாவை விட பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்தார். இப்போது என்னவென்றால் கண்ணம்மா வீட்டிற்கு பூ செடிகள் வாங்கி வருகிறார், அவரது சமையலை சாப்பிடுகிறார்.
இந்த அழகிய புரொமோ வெளியாக ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
இதேபோல் சண்டை இல்லாமல் நிறைய காட்சிகள் வைத்தாலும் அழகாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.