இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பெண்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது விஞ்ஞானரீதியாக நல்லது. உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
கணவரின் புகைப்பழக்கம் பெண்களின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் அவருடைய உயிரணுக்களைப் பாதிப்பதால், அவருக்குக் குறைபாடான அணுக்கள் உருவாகி பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைப் பேற்றை உருவாக்கக்கூடும். பிறக்கும் குழந்தையும் எடை குறைவாகப் பிறக்க நேரிடும்.
கர்ப்பிணிகள் கணவர் வெளியிடும் புகையை உள்ளிழுக்கும்போது அதில் உள்ள நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கர்ப்பிணிகளின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் அபாயம் உண்டு.
பெண்கள் கருத்தரித்திருப்பதை அவர்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ, எரிச்சலோ இல்லாமல் வெள் ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றல், மார்பகங்கள் பெரியதாகவும், வலி மற்றும் உறுத்தலுடன் இருத்தல், மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகவும் தோன்றுவது போன்றவை அதன் அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும்.
இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி சிசுவை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம். இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.
இப்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவு கொண்டாலும், குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டால் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். அதன் பின்பும் கருத்தரிக்காவிட்டால் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும்.
புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்குகிறது.
பெண்ணின் கரு முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.