தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவரது படங்கள் எல்லாமே தனியாக தெரியும்.
ஒரே மாதிரியான கதைக்களத்தில் எப்போதும் இருக்காது. அவரது இயக்கிய படங்களில் சில விருதெல்லாம் வாங்கியிருக்கிறது.
அப்படி அவர் இயக்கிய படங்களில் ஒன்று நீர்ப்பறவை. விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் என பலர் நடித்திருப்பார்கள்.
சீனு ராமசாமி கதை எழுதியதும் முதலில் நாயகனான விமலை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் விமல் அந்த நேரத்தில் வேறொரு படங்களின் வேலையில் பிஸியாக இருந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
எனவே அவருக்கு பிறகு படத்தில் நடிக்க நடிகர் விஷ்ணு விஷால் தேர்வாகி நடித்துள்ளார்.




















