சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனிற்கு பி.ஐ.எஸ். சான்று வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் SM-A037F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A03s மாடலில் 6.5 இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி A03s இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.